நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் தமிழகத்தில் மட்டும் 34,037 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும்
மேலாக நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைசர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.


இதுகுறித்து அவர் மக்களவையில் தெரிவிக்கையில்., "நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.



மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிக்காக 50% அளவிற்கு நிதி உதவி அளித்து வருவதாகவும், உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் 478 நீதிபதிகளுக்கான பணி நியனமங்களை வழங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அதேப்போல், உத்திரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் உயர்நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என மாநில அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. மாநில அரசு அதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தி தரும் பட்சத்தில் அதற்கு வழி வகை ஏற்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.