தமிழகம் & புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்!
தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் மழை குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்..... கடந்த நில நாட்களாக பொழிந்து வந்த வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் இருப்பதால் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான சாத்தியம் இல்லை. அதேநேரம், தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேற்கண்ட அதே நாட்களில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) மழைக்கு வாய்ப்பு குறைவு. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் ஆங்காங்கே லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.