ஜாதகத்தை நம்பி 4 மாத குழந்தையைக் கொலை செய்த தாய்! பழனி அருகே கொடூரம்...
பழனி அருகே ஜோசியரை நம்பி 4 மாத ஆண் குழந்தையைப் பெற்ற தாயே ஆற்றில் வீசி கொன்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்த ராசாபுரம் என்ற கிராமத்தில் மகேஸ்வரன் - லதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இரு குழந்தைகளுக்கும் இடையே போதுமான இடைவேளி இல்லாமல் தாய் லதா அடுத்தடுத்து பிரசவித்துள்ளார்.
இந்நிலையில் தாய் லதா தனது 2ஆவது மகனான கோகுல் என்ற 4 மாத குழந்தையை காணவில்லை என்று தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | என்று தீரும் இந்த நிர்பயா பாணி பாலியல் வன்கொடுமைகள்?
பின்னர் நடத்தப்பட்ட காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில், அருகில் இருந்த ஆற்றில் நான்கு மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், கொலையாளியை விரைவில் கண்டுபிடிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவின்பேரில் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கோகுலின் தாய் லதா குழந்தை கோகுலுக்கு ஜாதகம் பார்க்க சென்றதும், கோகுல் வளர்ந்தால் தந்தை உயிர் பறிபோய்விடும் என்று ஜோதிடர் கூறியதும், இதனால் தனது 4 மாத குழந்தையை ஆற்றில் வீசி லதா கொன்றதும் தெரியவந்தது.
மேலும் படிக்க | தாய் தந்தையை ஆத்திரம் தீர கழுத்தறுத்து கொன்ற மகன்... போலீசில் சிக்கியது எப்படி ?
மேலும், குறுகிய காலத்திற்குள் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் தொடர்ந்து உடல் நிலை சரியில்லாமல் காணப்பட்டு வந்த லதா ஜோதிடர் கூறியதுபோல் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினை வர காரணம் கோகுல்தான் என்று தவறாக புரிந்து கொண்டு குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையில் லதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR