புதுக்கோட்டை: காதலை கைவிட மறுத்த மகள் - உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற தாய்!
புதுக்கோட்டை அருகே காதலை கைவிட மறுத்த மகளை கட்டையால் அடித்துக்கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த மாணவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை. இவரது மனைவி ஜெயலெட்சுமி(55). இவர்களுக்கு மகாலிங்கம், ஆத்மநாதன் என்ற இரண்டு மகன்களும், சத்தியா மற்றும் நித்தியா என்ற ஒரே உருவமைப்புடைய (Twins) இரண்டு மகள்களும் உள்ளனர். ஜெயலட்சுமியின் கணவர் சுந்தரம் குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போதே குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக சென்றுவிட்டார்.
இதனால் ஜெயலட்சுமி மட்டுமே தனியாக குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். இதில், இரட்டை சகோதரிகளான சத்தியா, நித்தியா ஆகியோரில் நித்தியாவுக்கு கடந்த ஆண்டு திருமணமாகிவிட்டது. மற்றொரு சகோதரியான சத்யா சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சத்தியா வேலைபார்க்கும் நிறுவனத்தில் உடன் பணியாற்றும் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியதால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேசித்து வந்துள்ளனர். ஆனால், இந்த விவகாரம் தாய் ஜெயலட்சுமிக்கு தெரியவந்ததால் சந்தியாவை கண்டித்துள்ளார். மேலும், இளைஞருடனான தொடர்பை கைவிடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு சந்தியா சம்மதிக்காததால் உடல்நிலை சரியில்லை என கூறி மகளை ஊருக்கு புறப்பட்டு வர சொல்லியுள்ளார் ஜெயலட்சுமி. ஊருக்கு வந்த மகள் சத்தியாவிடம் தனது குடும்ப சூழ்நிலையை கூறி காதலை கைவிடுமாறி கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த மகள் சத்தியாவிற்கும், தாய் ஜெயலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே தாய் ஜெயலெட்சுமி கையில் கிடைத்த கட்டையால் சந்தியாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தூத்துக்குடி : பெற்ற தாயை கொலை செய்த 17 வயது சிறுமி!
இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்தியா சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்தார். அலரல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சந்தியாவை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துமவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிகளவு ரத்தம் வெளியேறி சிகிச்சை பலனின்றி சந்தியா உயிரிழந்தார்.
தகவலறிந்த நாகுடி காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாய் ஜெயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதல் விவகாரத்தால் பெற்ற மகளையே தாய் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | திருவள்ளூர்: விவாகரத்து கேட்டதில் தகராறு..மனைவி குத்திக்கொலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR