சமூக ஊடகம் மூலம் ஏற்பட்ட காதல் காரணமாக, கணவர், 2 மகள்களை உதறி விட்டு வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம்  பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தவர் ரெங்கன் என்னும் 31 வயது நபர் கொத்தானாராக வேலை பார்த்து வந்த நிலையில், அவருக்கு மனைவி ஐஸ்வர்யா (வயது27) மற்றும் 8 வயதிலும், 6 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை விஜய் என்ற  23 வயது நபரின் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மலர்ந்தது.


ஆனால், ஐஸ்வர்யா தனக்கு திருமணமானதையும், 2 குழந்தைகள் இருப்பதையும் சொல்லாமல், மறைத்து விஜய்யிடம் பழகி வந்துள்ளார்.  காதல் ஜோடியை சேர்த்து வைக்க விஜய்யின் குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டதால், திருமணம் செய்து கொள்ள கடந்த 16-ந்தேதி, குழந்தைகளையும், கண்வரையும் விட்டு விட்டு  வீட்டை விட்டு வெளியேறி ஐஸ்வர்யா ராமநாதபுரம் சென்றார்.


இந்நிலையில், விஜய் குடும்பத்தினர் திருமணத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக ஐஸ்வர்யாவிடம் ஆதார் அட்டையை தருமாறு கேட்டபோது அவர், தனக்கு திருமணம் ஆன விஷயம் தெரிந்து விடும் என்பதால் அதிர்ச்சி அடைந்தார். ஆதார் அட்டையை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் , இனிமேல் தனக்கு திருமணம் ஆன விஷயத்தை மறைக்க முடியாது என ஐஸ்வர்யா தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரு பெண் குழந்தைகள் உள்ளதை தெரிவித்து, ஆனால் தற்போது விஜய்யுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார்.


இதை கேட்டு விஜய் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணமான பெண்ணை, திருமணம் செய்துகொள்ள விஜய்யும் மறுத்துவிட்டார்.


ALSO READ | தந்தை - சகோதரனை பிணைக் கைதியாக்கி மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர்


பின்னர் விஜய் குடும்பத்தினர் ஐஸ்வர்யாவின் கணவர் செல்போன் எண்ணை பெற்று வருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ரெங்கன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்தார். ஆனால், ஐஸ்வர்யா கணவருடன் செல்ல மறுத்துள்ளார். இதையடுத்து அனைவரும் ராமநாதபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். 


நேற்று முன்தினம் இரவில், ஐஸ்வர்யாவை பாதுகாப்பாக வைத்திருக்க எண்ணி, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் அவரை தங்கவைத்தனர். ஆனால், விஜய் காதலை ஏற்க மறுத்த விரக்தியில் இருந்த ஐஸ்வர்யா நேற்று அதிகாலை 5 மணியளவில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று திடீரென அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ |  14 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR