Mother Language Day: பன்மொழி கலாச்சாரத்தை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும், பல மொழிகள் பேசும் மக்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றைக் காக்கும் நோக்கத்திலும், இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டோர் தமிழை கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்கள் தங்கள் சமூக வலைத்தளத்தில் "தாய்மொழி தின வாழ்த்துகள்" கூறி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், "தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் - உயிர்! உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்!


தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்! எனப் பதிவிட்டுள்ளார்.



மேலும் படிக்க: மொழியியல் & கலாச்சார பன்முகத்தன்மையை போற்றும் சர்வதேச தாய்மொழி தினம்


அதேபோல தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டரில், "பன்மொழி கலாச்சாரத்தை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும், பல மொழிகள் பேசும் மக்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றைக் காக்கும் நோக்கத்திலும், இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. 


“யாமறிந்த மொழிகளிலே  தமிழ்மொழிபோல் 
இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதியார்.


தமிழின் புகழை திக்கெங்கும் கொண்டு செல்வோம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு, சர்வதேச தாய்மொழி தின வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.



மேலும் படிக்க: உலக தாய்மொழி நாள்: செம்மொழியான தமிழ்மொழி; உலக மொழிகளுள் தொன்மையானது!


தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது டிவிட்டர் பக்கத்தில், "சர்வதேச தாய்மொழி தினத்தில், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டோர் என்பதில் பெருமிதம் கொள்வதோடு,அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று உறுதியேற்போம். #தாய்மொழி_தினம் எனக் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் படிக்க: ஹிந்தியை திணிக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ