தமிழ்நாட்டின் கரூர் (Karur) அருகே ஏற்பட்ட தீ விபத்தில் (Fire Accident) ஒரு தாயும் அவரது இரண்டு மகன்களும் கொல்லப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல்களின்படி, சார்ஜ் செய்யப்பட்டிருந்த ஒரு மொபைல் ஃபோனிலிருந்து (Mobile Phone) தீப்பிடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மகன்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்.


முதுலட்சுமி (29), கரூர் நகருக்கு அருகிலுள்ள ராயனூரில், தனது 3 வயதான இரட்டை மகங்களுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் 31 வயதான பாலகிருஷ்ணனை மணந்தார். மேலும் ராயனூர் அருகே ஒரு சிறிய ஹோட்டலை நடத்தி வந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், முத்துலட்சுமி தனது கணவரிடமிருந்து சில பிரச்சினைகள் காரணமாக பிரிந்து, ராயனூரில் அவரது இரண்டு மகன்கள் மற்றும் அவரது பெற்றோருடன் தனியாக வசித்து வந்தார். லாக்டௌனின் வருமானம் கிடைக்க வழி இல்லாமல் போகவே, அந்தக் குடும்பம் பணத்திற்கு கஷ்டப்பட்டது. இந்நிலையில், முத்துலட்சுமி தனது பெற்றோரை ராமநாதபுரத்தில் உள்ள உறவினர்களிடமிருந்து கடன் வாங்கி வர அனுப்பியதாக கூறப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமை இரவு, முத்துலட்சுமி தனது வீட்டில் சோபாவில் தூங்கிக்கொண்டிருந்தார். அவரது தொலைபேசி சார்ஜ் செய்ய செருகப்பட்டிருந்தது. திங்கட்கிழமை காலை 6 மணியளவில், அவரது வீட்டிலிருந்து புகை வெளியே வருவதைக் கவனித்த அவரது அண்டை வீட்டார், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை எச்சரித்தனர். பணியாளர்கள் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். வீட்டுனுள்ளே முத்துலட்சுமியின் உடலையும் மயக்கத்தில் கிடந்த இரண்டு குழந்தைகளையும் கண்டு அனைவரும் திகைத்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சிறுவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தனர்.


ALSO READ: கடலூரில் முன் விரோதத்தால் வெடித்த வன்முறை, பற்றி எரிந்த படகுகள், 43 பேர் போலீஸ் காவலில்!!


காவல்துறையினர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடல்கள் பின்னர் முத்துலட்சுமியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். இதற்கிடையில், இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, 30 வயதான ஒருவர், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்ததில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.