சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள கட்டிடம் இன்று இடிக்கப்படும் என சி.எம்.டி.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அடுக்குமாடி கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே அதன் அருகே உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது. அந்த கட்டிடத்தை இடிக்க வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2-வது கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடம் இன்று  இடிக்கப்பட்டது.


இந்நிலையில், இன்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் கட்டடத்தை தகர்க்க முடிவு செய்யப்பட்டது. இதனால் சுற்றியிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டன. ஆனால் மழை பெய்ததாலும், தொடர்ந்து ஏற்பட்ட சில தொழில் நுட்ப கோளாறு காரணமாகவும் கட்டிடத்தை தகர்க்கும் பணி ஒத்தி வைக்கப்பட்டது. 


வெடி பொருட்கள் நிரப்பும் பணி முடிந்தவுடன் ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டது. 10 வினாடிகளில் கட்டிடம்  முற்றிலும் தரை மட்டமானது. அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. சிஎம்.டி.ஏ அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.