எந்நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பின்ர தம்பிதுரை தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள வாஞ்சிநாத சுவாமி கோவிலில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை அவர்கள் தனது மனைவி, மகளுடன் இன்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எந்நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர்,... திமுக ஆட்சியின்போது பென்னாகரம் இடைத்தேர்தல் வந்தது. அந்த சமயத்தில் ஜெயலலிதா, பொங்கல் நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது. தேர்தல் வைத்தால் சரியாக இருக்காது என்று தெரிவித்து தேர்தலை தள்ளி வைத்தார்.


தேர்தல் ஆணையம் தமிழகத்தின் நிலையை அறிந்து அதற்கேற்றாற்போல் அறிவித்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. கஜா புயலால் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ள திருவாரூரில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது சில பிரச்சனைகளை உருவாக்கும்.


தேர்தலை நடத்துவதும், தள்ளி வைப்பதும் தேர்தல் ஆணையத்தின் முடிவு. ஆனால் எந்நேரத்தில் தேர்தல் நடந்தாலும் அதிமுக அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கும் என தெரிவித்தார்.


மேலும் அதிமுக வேட்பாளர் குறித்து கேட்கையில்., விரைவில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். திருவாரூரில் அதிமுக வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால், 52 வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளனர். வரும் இடைத்தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என குறிப்பிட்டுள்ளார்.