புயலால் பாதித்த 7 மாவட்டத்தில் கட்டணமில்லா MRI, CT ஸ்கேன்...
புயல்பாதித்த தஞ்சை, திருவாரூர். நாகை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி MRI, CT ஸ்கேன்!
புயல்பாதித்த தஞ்சை, திருவாரூர். நாகை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி MRI, CT ஸ்கேன்!
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இருப்பினும் இரவு பகல் பாராமல் புயல் நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. புயலார் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், புயல் பாதித்த 7 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க கட்டணமில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தீவிர சிகிச்சையை பொருத்தவரை MRI, CT ஸ்கேன்கள் எடுக்க எப்போதும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பது பொதுவான நடைமுறை என்று தெரிவித்தார்.
ஆனால், தற்போது புயல் பாதித்த 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமின்றி ஸ்கேன் எடுத்துக் கொள்ளலாம் என்று விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்!.