முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப்பணி மேற்கொள்கிறீர்கள்? என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு கார் பார்க்கிங் அமைக்கும் கட்டுமானப்பணிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதுடன், இரு மாநிலத்திற்கும் பொதுவாக பிரச்னை முடித்து வைக்கப்படும் என்று கூறியிருந்தது. உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியிருந்த நிலையிலும், கேரள அரசு தொடர்ந்து கட்டுமானப்பணியை மேற்கொண்டு வந்தாக தமிழக அரசு முறையிட்டது. 


தொடர்ச்சியாக, வழக்கின் இன்றைய விசாரணையில், முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப்பணி மேற்கொள்கிறீர்கள்? இரு மாநிலத்திற்கு இடையேயான பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கமாட்டீர்களா? என்று கேரள அரசுக்கு, நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு தங்களது கண்டனத்தையும் முன்வைத்தனர். மேலும்,  இது தொடர்பாக 15 நாளில் பதிலளிக்க வேண்டும் என கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தவிட்டுள்ளனர்.