யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டதால் இலங்கை தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதை எதிர்த்து நள்ளிரவில் தொடங்கி பலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் வெடித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இராணுவத்துக்கும் இடையிலான போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.


தற்போது நிர்வாகத்தால் ஒரே இரவில் யாழ்ப்பாண (Jaffna) பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கூடி எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் வெடித்தது. போலீசாரும் இராணுவமும் பல்கலைக்கழக வாசலில் குவிந்தன.


நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கூடிய எதிர்ப்பாளர்கள், “இடிக்க வேண்டாம், இடிக்க வேண்டாம், இனப்படுகொலை செய்ய வேண்டாம்!” என்று கூச்சலிட்டனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனால், பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.


முள்ளிவாய்க்காலில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் உயிர் இழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.


ராஜபக்ச சகோதரர்கள் அரசின் உத்தரவால், 2019ல் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இதை தடுக்க, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர். ராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நினைவிடம் தகர்க்கப்படுவதை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளானார்.


நினைவுச் சின்னத்தை இடிப்பதில் எந்த இடையூறும் வராதபடி பல்கலைக்கழக வாளகத்தைச் சுற்றி, சிறப்பு அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பல தரப்புகளிலிருந்து பல எதிர்ப்புகள் எழுந்த போதிலும், எதைப் பற்றியும் கவலைப்படாத இலங்கை (Sri Lanka) அரசு, நேற்று இரவு முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துத் தள்ளியது.


ALSO READ: இலங்கைவாழ் தமிழர்கள் குறித்த ஜெய்ஷங்கரின் கருத்தை வரவேற்கிறேன்: Banwarilal Purohit


தமிழக தலைவர்கள் கண்டனம்:


முள்ளிவாய்க்கல் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ள இலங்கை இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாளவன் (Thirumavalavan) தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். தமிழனத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாக சிதைக்கும், சிங்களர்களின் ஆதிக்கத்தை தகர்ப்போம் என்றும், தமிழர் அடையாளம் காப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல, சிங்களப் பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கும் இக்கோர சம்பவம், வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.



இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் (S.Jaishankar) சமீபத்தில்தான் இலங்கையில் அரசியல் தலைவர்களை சந்தித்து இலங்கை வாழ் தமிழர்களின் நலன் காக்குமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: எந்த நொடியிலும் போருக்கு தயாராக இருங்கள்: சீன இராணுவத்திற்கு உத்தரவிட்ட Xi Jinping


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR