Railway News : சென்னை நகரமே இப்போது உருமாறிக் கொண்டிருக்கிறது. உலகத் தரமான மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. புதிய மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்களுக்கான பணிகள் எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக இரட்டை அடுக்கு மெட்ரோ பாலமும் சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சென்னையின் கிண்டி லோக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குட்பட்ட கிண்டி ரயில் நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் (எம்.எல்.சி.பி.) வசதியை உருவாக்கும் வகையில் மறுவடிவமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வடநாட்டுக் கொள்ளைக் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு... ஒருவர் பலி - நாமக்கலில் பரபரப்பு!


தினசரி 65 ஆயிரம் பயணிகளை சமாளிக்கும் வகையிலான அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டுமானங்கள் கிண்டி ரயில் நிலையத்தில் செய்யப்பட இருக்கின்றன. மேலும், 150 கார்கள் வரை அங்கு பார்க்கிங் செய்து கொள்ளும் வகையில் பார்க்கிங் வசதிகள் உருவாக்கப்பட இருக்கின்றன. குறுகிய கால பார்க்கிங் கட்டணம் என்ற வகையில், ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ரூ. 25 ஆகவும், மாதாந்திர பாஸ் ரூ. 3,750 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் ரயில் பயணத்தை பயன்படுத்துபவர்கள் மற்றும் பயன்படுத்தாதவர்கள் என இருவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


அதாவது கிண்டி பகுதியில் வசிப்பவர்களும் இங்கு கார் பார்க்கிங் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பல அடுக்குகளைக் கொண்ட கட்டடமாக உருவாக்கப்படுகிறது. automated vehicle management system இந்த கட்டடத்தில் பொருத்தப்பட இருக்கிறது. கார் பார்க்கிங் மட்டுமல்லாது உணவு கூடங்கள், கடைகள், பொழுதுபோக்கு மையங்கள், குழந்தைகள் விளையாடும் பகுதிகள், விளையாட்டு மண்டலங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், நர்சரிகள், பாப்-அப் கடைகளும் இந்த மல்டி லெவல் பில்டிங்கில் இடம்பெற இருக்கின்றன.


15 வருட கால ஒப்பந்தத்துடன், பில்ட்-ஆபரேட்-ட்ரான்ஸ்ஃபர் (BOT) மாதிரியில் இ-ஏலத்தின் மூலம் திட்டம் வழங்கப்படும். இந்திய ரயில்வேயின் E-Procurement Services website மூலம் அக்டோபர் 9-ம் தேதி ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள ஏலதாரர்கள் கூடுதல் விவரங்களை ஐஆர்இபிஎஸ் போர்ட்டலில் தெரிந்து கொள்ளலாம். சென்னையில் உள்ள கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜி அப்போ சீட்டிங், பிராடு... இப்போ ஸ்டாலினுக்கு தியாகியா? - ஜெயக்குமார் சரமாரி கேள்வி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ