மதுவால் ஏற்பட்ட சோகம்! கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, மகள், மருமகன்
Chennai Crime News: குடிபோதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய வழக்கில் மனைவி, மகள், மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், கோவிந்தப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(59), பெயிண்டராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடைய இவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர் தகராறு செய்து விட்டு கயிற்றால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் இறந்து போன ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது கழுத்து இறுக்கப்பட்டும் தலையில் அடிபட்டும் இறந்து இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து இறுக்கப்பட்டு இறந்ததாக வந்த தகவலையடுத்து மதுரவாயல் உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் தலைமையில் இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி மற்றும் மருமகன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் குடிபோதையில் தகராறு செய்ததால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்பு கொண்டனர்.
மேலும் படிக்க: மகள் மீது தாய் புகார்! ஒரு கிலோ தங்கத்தை திருடி காதலனுடன் உல்லாசமாக சுற்றிய மகள்
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "குடிபழக்கம் உடைய ராஜேந்திரன் இரவு தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்த நிலையில் அவ்வப்போது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொண்டு தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த ராஜேந்திரன் தொந்தரவு அதிகமாக இருப்பதாக கூறி ராஜேந்திரன் மனைவி வசந்தா அவரது மகள் ராஜேஷ்வரி, மருமகன் பிரதாப் ஆகியோர் சேர்ந்து ராஜேந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
இந்த நிலையில், ராஜேந்திரன் கழுத்தை வசந்தாவும், பிரதாப்பும் சேர்ந்து கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளனர். ஆட்கள் யாரும் வராத வகையில் ராஜேஸ்வரி காவல் காத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மதுரவாயல் போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி மனைவி வசந்தா, மகள் ராஜேஸ்வரி, மருமகன் பிரதாப் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குடிபோதையில் தகராறு செய்த கணவரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய வழக்கில் மனைவி, மகள், மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும் படிக்க: இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் கைது: காவி உடையில் இருந்த கயவனை பிடித்த காவல்துறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR