நான் பாஜகவில் சேர்ந்ததால் என் அப்பா 6 மாதங்கள் என்னிடம் பேசாமல் இருந்தது இன்றும் மாறாத வடுவாக, மிகப்பெரிய காயமாக இருக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 


இந்நிலையில், பா.ஜனதாவின் வேட்பாளராக தூத்துக்குடியில் களமிறங்கியுள்ள அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், BJP-ல் சேர்ந்ததால் அப்பா என்னிடம் பேசவே இல்லை, வலிமையான பெண்ணாக இருந்தாலும் அது என்னை மிகவும் வருத்தியது என தெரிவித்துள்ளார்.


மேலும், அவர் கூறுகையில், 'எனக்கு என் அப்பாதான் எல்லாமே. சிறு வயதில் இருந்தே அவரின் அரசியல் செயல்பாடுகளில் நானும் உடனிருந்திருக்கிறேன். அவருடைய பாதயாத்திரை முதலான விஷயங்களில் நானும் சென்றிருக்கிறேன். ஏதேனும் அறிக்கைகள் தயார் செய்யவேண்டு என்றால், ‘இசை, பேப்பர், பேனாவை எடுத்துக்கோ’ என்பார் அப்பா. அவர் சொல்லச் சொல்ல, நான் கார்பன் வைத்து எழுதித் தருவேன். அப்பா என்னை ‘இசை இசை’ என்றுதான் கூப்பிடுவார். வருடைய பல அரசியல் நிகழ்வுகளில் நானும் கூடவே இருந்திருக்கேன். எனக்கும் அப்பாவுக்கும் அப்படியொரு நெருக்கமும் பிணைப்பும் அரசியலில் இருந்தது. அவருடைய உயரத்தை அவர் அடையவில்லை என்ற வருத்தம் எனக்குள்ளே உண்டு.


ஆனால், ஒருகட்டத்தில், அரசியலுக்கு வரவேண்டும் என நான் நினைத்தேன். பாஜகவைத் தேர்ந்தெடுத்தேன். இதைக் கண்டு என் கணவர் உட்பட எல்லோருமே அதிர்ந்துபோனார்கள். நான் கட்சியில் சேர்ந்த நாளின் போது, கணவர்தான் இன்னும் பதட்டமாகிப் போனார். 'அப்பாவுக்குத் தகவல் தெரியறதுக்குள்ளே நாமளே சொல்லிடலாம்’னு என் அப்பாவுக்குப் போன் செய்தார். அதைக் கேட்டதும் அப்பா ரொம்பவே அப்செட்டாகிவிட்டார். ‘அப்பா ஒரு கட்சியில, பொண்ணு ஒரு கட்சியில. என் மானமே போச்சு’ என வருத்தப்பட்டார். அதன் பிறகு பல மாதங்கள் என்னுடன் பேசவே இல்லை. அதுதான் எனக்கு மாறாத வடுவாக, வலியாக இன்னமும் இருக்கிறது. பாஜகவின் தமிழக தலைவராகப் பொறுப்பேற்ற அன்றைக்கு, ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று எனக்காக வேண்டிக்கொண்டு, பிரசாதத்தை எடுத்து வந்து, வீட்டில் வந்து கொடுத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். 


அப்படியொரு ஒழுக்கமானவர் அப்பா. நேர்மையானவர். யாருடைய காசுக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டதே இல்லை அவர். ஆனால், அவருக்கான அங்கீகாரமோ பெருமையோ கிடைக்கவில்லை. அவரின் பெயரைக் காப்பாற்றும் விதமாக, ‘குமரி அனந்தன் பொண்ணு’ன்னு பேர் எடுக்க வேண்டும். அப்பாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் இது தான் என் ஆசை" என அவர் தெரிவித்துள்ளார்.