அடுத்த 5 ஆண்டு ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை!!
5 ஆண்டுகால ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியனான என் ஆசை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!!
5 ஆண்டுகால ஆட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியனான என் ஆசை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!!
மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இடம் ஒதுக்காதது ஏமாற்றமளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சி விமானநிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், வாக்குபதிவு இயந்திரத்தில் போடப்பட்ட ஓட்டுகள் காணாமல் போய்விட்டதாக கூறுவது தொடர்பான கேள்விக்கு, ஒட்டுமொத்தமாக தவறு நடந்திருப்பதாக சொல்லிவிட முடியாது. சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என்ன என்று கண்டுபிடிக்க வேண்டியது நம்முடைய கடமை என தெரிவித்தார்.
அரவக்குறிச்சி பிரச்னை முடிவா? ஆரம்பமா? என்ற கேள்விக்கு, எப்படி இருந்தாலும் நேர்மையாக சட்டத்திற்கு உட்பட்டு நடப்போம் என பதிலளித்தார். தேர்தல் முடிவுக்கு பின்பு தமிழகம் புறக்கணிக்கப்படும் என்ற அச்சம் உள்ளதா? என்ற கேள்விக்கு, அது எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அச்சம் ஆக இருக்க வேண்டியதில்லை சந்தேகமாக மட்டும் இருந்தால் போதுமானது என கூறினார்.
மோடியின் வருங்கால ஐந்தாண்டு ஆட்சி எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியனான என் ஆசை என கூறியுள்ளார்.