கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் 3 பேரை கைது செய்து, அவர்களுக்கு நேற்றய தினம் நீதிமன்றம்  7 ஆண்டு சிறை, அபராதம் விதித்ததை வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் ஒரு கருத்துகளுக்கிடையே மாற்று கருத்துகள் வைக்க முடியுமோ தவிர ஒரு இயக்கத்தையோ, இயக்கத்தின் தொண்டர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு என்பது முட்டால் தனமானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திமுக திட்டங்களுக்கு பெயர் சூட்டிய அதிமுக பேச என்ன தகுதி இருக்கிறது? - முதலமைச்சர்


நேற்று மாலை திடீரென ஒரு மர்ம நபர் சட்டமன்ற அலுவலகத்தில் நுழைந்துள்ளார். அங்கு உதவியாளர் மட்டும் இருந்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் கதவை தாளிட முயன்றுள்ளார். பின்னர் மர்ம நபரை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார். அதற்கு பின் மர்ம நபர் குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் காவல் ஆய்வாளரிடம் சம்பவம் குறித்து பேசியபோது யார் என்று விசாரிக்கிறோம் என தெரிவித்தனர். பின்னர் சம்மந்தப்பட்ட நபர் சாலையில் சென்று இறந்துள்ளார். தற்போது சடலம் யார் என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை.


காவல்துறையினர் யார் அந்த மர்ம நபர் என்ன நோக்கத்துடன் அலுவலகத்தில் நுழைந்தார் என்பதை தீர விசாரிக்க வேண்டும். வருமான வரித்துறை சட்டத்திற்கு புறம்பாக இருக்க  கூடிய நபர்களின் வீட்டில் சோதனை நடப்படுவது வழக்கமான ஒன்று தான். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 2019ல் இருந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதிமுக பொதுசெயலாளர் கூட்டணி  தொடரும் என டெல்லியில் பேசியுள்ளார். அதிமுகவினரின் நேற்று பேட்டி ரியாக்சன் குறித்து தேசிய தலைமை கருத்து சொல்லவேண்டிய விஷயம். 



அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயம். நான் எந்த கருத்து சொல்ல விரும்பவில்லை. சூயஸ் கால்வாய் பணிகள் எங்கே முடிக்கப்பட்டுள்ளது?. அங்கு சாலைகள் போடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலதாமதம் ஏற்பட்டால் இது தொடர்பாக முதலமைச்சரை பார்ப்பதற்கு தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.


மேலும் படிக்க | ’#செருப்பு_பிஞ்சுறும்_420மலை’ டிவிட்டரில் டிரெண்ட் செய்த அதிமுக - காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ