திருவாரூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். யாருடனும் கூட்டணி கிடையாது. இந்த தொகுதிக்கான வேட்பாளரை சனவரி 10 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி அறிவிக்கும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், திருவாரூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் வேட்பாளரை குறித்து அறிவிப்பை வெளியிட்டார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது, "வரும் ஜனவரி 28-ஆம் நாள் நடைபெற உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். நமது வேட்பாளராக சாகுல் அமீது போட்டியிடுவார் என்பதை அறிவிப்பதில் மகிச்சியடைகிறேன்.


தேர்தல் களப்பணிகளில் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 


இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் சனவரி 3 ஆம் தேதி முதல் சனவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி எனவும், திருவாரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.