நடிகர் திலகம் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஒன்றாக
தமிழ் சினிமாவில் நடிப்பின் களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.
இதை தவிர ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளான செப்டம்பர் 16-ம் தேதியும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.