நாகை-யில் முகாம்கள் அமைக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...
நாகை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும், புயலால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது!
நாகை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும், புயலால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது!
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதற்கட்டமாக நாகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேட்டைக்காரன் இருப்பு கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர், அங்கு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, முகாமில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு அதன் தரத்தை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் உள்ள பள்ளிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.