டெல்லி ஆளுநர் நஜீப் ஜங் திடீர் ராஜினாமா!
டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நஜீப் ஜங் தனது துணை நிலை கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார், இதற்காக தனது ராஜினாமா கடிதத்தை மத்திய அரசிடம் அளித்துள்ளார்.
டெல்லியில் ஒரு ஆண்டு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்ற போது நிர்வாகம் தங்கு தடையின்றி சுமுகமாக நடைபெற்றது. அப்போது முழு ஆதரவு அளித்த டெல்லி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் டெல்லி மக்கள்என் மீது வைத்த பாசத்திற்கும் அன்பிற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனக்கான உதவிகளையும் ஒத்துழைப்பையும் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் இருவருக்கும் இடையே டெல்லி அதிகாரிகளின் நியமனம் தொடங்கி அனைத்தும் விவகாரங்களிலும் மோதல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.