நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே நிதி நிறுவனத்தில் வாங்கிய தொகையை செலுத்திய பிறகும் அதிக வட்டி கேட்டு கூலி தொழிலாளியை அடித்து துன்புறுத்தும் பாஜக நிர்வாகியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூலி தொழிலாளி:


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். விசைத்தறி கூலி தொழிலாளியான இவர் பள்ளிபாளையம் பெருமாள் மலைப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் 20000 ரூபாய் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். தான் பெற்ற பணத்திற்கான வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை முழுவதுமாக திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் அதன் பிறகும் வட்டி கேட்டு பாஜக நிர்வாகி ஒருவர் அவரை தொல்லை செய்துள்ளார். 


அடித்து துன்புறுத்திய பாஜக நிர்வாகி..


ராம்குமார் கடன் பெற்ற நிதி நிறுவனத்திற்கு பா.ஜ.க நிர்வாகியான நாச்சிமுத்து என்பவர் முதலாளியாக இருந்துள்ளார். இந்த நிலையில், தான் கொடுத்த அசல் ஆவணங்களை அந்த நிதி நிறுவனத்தின் அதிபரான பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வர்த்தக அணி பிரிவு அமைப்பாளர் நாச்சிமுத்து, ராம்குமார் பெற்ற 20000 ரூபாய் ரொக்க தொகையினை மீண்டும் செலுத்தினால் மட்டுமே  அசல் ஆவணங்களை திரும்ப தரமுடியும் என கூறியதாக தெரிகிறது. இதற்கு ராம்குமார் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி கேட்டதால், நாச்சிமுத்து தனது நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அடியாட்களை கொண்டு கூலி தொழிலாளி ராம்குமாரை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது


மேலும் படிக்க | கணவருக்கு தெரியாமல் குழந்தை பெற்ற பெண்: குழந்தைக்கு நேர்ந்த துயரம்!


பாஜக நிர்வாகிகளில் அட்டூழியம்..


மத்திய பிரதேசித்தில் பாஜக நிர்வாகி ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் அப்போது குடிபாேதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவரது காலை மத்தியபிரதேசமுதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கழுவினார். இதையடுத்து, பழங்குடியினருக்கு இத்தகைய கொடுமை நடந்துள்ளது என்பதை அறிந்த உடனேயே கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டிருந்தார். முதலமைச்சரின் உத்தரவுப்படியே இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த சுக்லா நேற்று கைது செய்யப்பட்டதோடு மட்டுமின்றி அவர் கட்டிய வீடும் இடிக்கப்பட்டுள்ளது. புல்டவுஸர் மூலமாக அவரது வீட்டை இடித்த அதிகாரிகள் சட்டவிரோதமாக வீடு கட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட இளைஞர் தஷ்ரத் ராவத்தை இல்லத்திற்கு அழைத்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், இளைஞரிடம் மன்னிப்பு கோரினார்.


மேலும் படிக்க | ஆளுநர் நெனச்சா மந்திரி! இல்லன்னா எந்திரி : ஹெச்.ராஜா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ