நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த செல்லிபாளையம் காலணியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான பெரியசாமி. இவருக்கும் அதே காலணி பகுதியை சேர்ந்த பிரேமாக்கும் திருமணமாகி பள்ளி படிக்கும் இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த பெரியசாமியிடம், அவரது மனைவி பிரேமா, தனக்கு கடுமையாக காது வலிப்பதாக கூறி அழுதுள்ளார். இதனையடுத்து  பெரியசாமி, தனது மனைவி பிரேமாவை நள்ளிரவு 2 மணியளவில் மோகனூரில் உள்ள மருத்துவமனைக்கு தனது இருச்சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்பிறகு செல்லிபாளையம் அருகே உள்ள வளைவில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், பிரேமா சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் பிரேமா அவரது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை உண்மையென நம்பிய பெரியசாமியின் உறவினர்கள் சாலை கிடந்த பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெரியசாமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து அன்று மாலையே பெரியசாமி உடல் நாமக்கல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 


மேலும் படிக்க | தேனியில் காதலை கண்டித்ததால் தந்தையை கொல்ல திட்டமிட்ட மகள்!


இதுகுறித்து பிரேமா அளித்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்தனர். இதனையடுத்து பிரேமாவின் நடத்தையில் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரது நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது தான் பிரேமா மோகனூர் பகுதியில் உள்ள பேக்கரியில் பணியாற்றிய போது அங்கு உடன் பணிபுரிந்த நந்தி கேசவன் என்ற இளைஞருடன் தகாத உறவில் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பேக்கரி உரிமையாளரிடம் பெரியசாமியின் உறவினர்கள் விசாரணை செய்ததில் பிரேமாவுக்கும் நந்தி கேசவனுக்கும் இடையே இருந்த தகாத உறவு குறித்த உண்மை தெரியவந்துள்ளது.  



தொடர்ந்து, பெரியசாமியின் இறப்பில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதனால் போலீசாரும் பிரேமாவிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் பிரேமா, ஒரு கட்டத்தில் நந்தி கேசவன் என்ற இளைஞருடன் கடந்த சில மாதங்களாகவே நெருக்கமாக பழகி வந்ததாகவும், இதனை தெரிந்து கொண்ட பிரேமாவின் கணவர் பெரியசாமி, இருவரையும் கண்டித்ததாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பிரேமாவின் கணவர் பெரியசாமி பேக்கரி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். 



இதனையடுத்து பேக்கரி உரிமையாளர் இருவரையும் வேலையில் இருந்தும் நீக்கியும் உள்ளார். இதனால் இருவரும் சந்திக்க முடியாமல் போனது. இதனால் தங்கள் காதலுக்கு இடையூராக இருக்கும் பெரியசாமியை தீர்த்துக் கட்ட முடிவு செய்து விபத்து நடந்ததாக கூறிய அன்று இரவு, தனக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி கணவர் பெரியசாமியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் காதலன் நந்தி கேசவன் மற்றும் அவரது நண்பர் தனுஷ் ஆகியோர் காரில் வந்துள்ளனர். செல்லிபாளையம் தரைப்பாலம் அருகே பெரியசாமி வாகனத்தை வழிமறித்து அவர்கள் அவரை கடப்பாரையால் அடித்தே கொலை செய்து விட்டு விபத்து போல நாடகமாடியதை பிரேமா போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். 


இதன்பின் பிரேமாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த நந்தி கேசவனை தர்மபுரியிலும், அவரது நண்பர் தனுஷை அரக்கோணத்திலும் கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். காதலனை சந்திக்க கணவர் தடை போட்டதால், மனைவி சதி திட்டம் தீட்டி கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | காவிரி: 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ