புது டெல்லி: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தியது உட்பட, பல்வேறு பணிகளுக்காக, மத்திய அரசு சார்பில், தமிழக உள்ளாட்சி துறைக்கு, 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விழாவில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மாநில அளவில் 2, மாவட்ட அளவில் 4, ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அளவில் தலா 1 என 8 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டுக்காக 1, ரூர்பன் திட்டத்தின் கீழ் 2, தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் தேசிய தங்க விருது என 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


இந்த விருதுகளை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் தமிழக உள்துறை அமைச்சர் வேலுமணி பெறுகிறார். நடப்பாண்டு, ஊரக வளர்ச்சித் துறை, ஏற்கனவே, 19 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. தற்போது நேற்று வழங்கப்பட்ட விருதுகளுடன் சேர்த்து மொத்தம் 31 விருதுகளை பெற்றுள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.