ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22 ஆம் தேதி பொதுமக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பலர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


மேலும், இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் எஸ்.பி, துணை வட்டாட்சியர்கள் உட்பட 11 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தனர். இதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு பற்றிய முழு விசாரணையை சி.பி.ஐ நடத்த வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. 


ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டிற்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.இ.ஓ ராம்நாத் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தேங்கிக்கிடக்கின்றன. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல், வரி செலுத்துதல் உள்ளிட்ட வேலைகள் முடிக்கப்பட வேண்டும் என கூறியதன் அடிப்படையில், நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள மட்டும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. 


இதனை கண்காணிக்கும் குழுவில் மாசுக்கட்டுப்பாட்டு பிரதிநிதி ஒருவரையும் நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.