புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல்  அமைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தினை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். ஆனால், இந்த புதிய தேசிய சின்னம், நமது தேசிய சின்னமான அசோகரின் கம்பீரமான நான்கு சிங்கங்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அசோகரின் சிங்கங்கள் அழகாககவும், கம்பீரமாகவும் இருக்குமெனவும், மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள தேசியச் சின்னத்தில் உள்ள சிங்கங்கள் ஆக்ரோஷமாகவும், உறுமிக்கொண்டும் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Roar of Lioness: பிளிரும் பெண் சிங்கத்தின் கர்ஜனையின் பின்னுள்ள ரகசியம் தெரியுமா?


காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் உள்ளிட்ட பலர், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசியச் சின்னத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 


காந்திக்கு பதிலாக கோட்சேவைத் தேர்வு செய்வது போல், அமைதியான சிங்கங்களுக்குப் பதிலாக இந்த ஆக்ரோஷமான சிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே மோடியின் புதிய இந்தியா எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ஆனால், இந்த விமர்சனங்களை மத்திய பாஜக அரசு மறுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சாரநாத் தூணில் உள்ள நான்கு முக சின்னங்களின் உயரம் சுமார் ஒன்றரை மீட்டர் தான் எனவும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள தேசியச் சின்னத்தின் உயரம் ஆறரை மீட்டர் எனவும் கூறியுள்ளார்.


இதனிடையே, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் அசோகர் சின்ன விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அசோகரின் பௌத்த சாரநாத் தூணின் நான்முக சிங்க உருவம்தான் இந்திய அரசின்சின்னமாகத் தேர்வு செய்யப்பட்டு இன்றுவரை நாணயங்களிலும் இதர அரசுமுத்திரைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள அசோகர் சின்னத்தில் உள்ள சிங்கங்களின் முகங்கள் கோரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுபோன்று, வடிவமைப்பு செய்திருப்பது இயல்பாக நடந்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து அவர் பேசியதாவது, ‘அசோகர் சின்னத்தில்  சிங்கங்கள் கம்பீரம் இருக்குமே தவிர 'வெறித்ததுமான' முகம்இருக்காது. பருத்தும் வெறித்தும் நிற்கும் இச்சிங்கங்கள் சாரநாத் சிங்கங்கள் போன்று இல்லை. ஒன்றிய அரசின் திரிக்கப்பட்ட வேறு சிங்கங்கள் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் தேசிய சின்னம் திரிக்கப்பட்டிருப்பது எதேச்சதிகார நடவடிக்கையாக அமைந்துள்ளது.


மேலும் படிக்க | புத்தர் குறித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்தில் சர்ச்சை எதுவும் இல்லை: இந்தியா


நவீனத் தொழில்நுட்பங்கள் மிக அதிகமாக வளர்ந்து வரும் இன்றைய சூழலில் குறிப்பாக ஒன்றிய அரசு சொல்லுகிற டிஜிட்டல் இந்தியா சூழலில் மாபெரும் வரலாற்றுத் திரிபைச் செய்துவரும் ஒன்றிய அரசின் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. எனவே அந்த சிலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு உண்மையான வடிவத்தில் அசோக சின்னத்தை வடிவமைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்கேட்டுக்கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR