Roar of Lioness: பிளிரும் பெண் சிங்கத்தின் கர்ஜனையின் பின்னுள்ள ரகசியம் தெரியுமா?

காட்டு சிங்கத்தின் கர்ஜிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது, சிங்கங்களின் கர்ஜனை தொடர்பான ரகசியம் ஆச்சரியமளிக்கிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2022, 07:20 AM IST
  • பிளிரும் பெண் சிங்கத்தின் ரகசிய உறுமல்
  • வைரலாகும் வனத்தின் வீடியோ
  • சிங்கப்பெண்ணுக்கு என்ன ஆச்சு?
Roar of Lioness: பிளிரும் பெண் சிங்கத்தின் கர்ஜனையின் பின்னுள்ள ரகசியம் தெரியுமா? title=

சமூக வலைதளங்களில் பெண் சிங்கத்தின் (Lioness) வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சிங்கத்தின் கர்ஜனை வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி அன்ஷுமன் ஷர்மா ட்வீட் செய்துள்ளார்.

விலங்குகள் மத்தியில் சிங்கத்தின் இடம் தலைமை இடம். காட்டுக்கே ராஜா என்று கருதப்படும் சிங்கம், தனது இரையை தப்பவிடுவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

சிங்கத்தைப் பார்த்து அனைவரும் பயப்பட்டாலும், ஒரு சிங்கம், மற்றொரு  சிங்கத்தைக் கண்டு பயப்படும் என்பது தெரியுமா? இந்த உண்மை சிலருக்கு மட்டுமே தெரியும். சீறும் சிங்கத்தின் கோபத்தைக் கண்டு சக சிங்கமும் வேறுவழியில்லாமல் திரும்பிப் போய்விடுகிறது.

சிங்கத்தைப் பார்க்க அனைவருக்கும் விருப்பம் இருந்தாலும், நேராக பார்த்தால் வெலவெலத்துப் போய்விடுவார்கள். ஆனால், சிங்கத்தின் வீடியோவை (Viral Video) பார்க்க யாருக்கும் பயமே இருக்காது.

ALSO READ | வைரல் வீடியோ: முதலையை புரட்டி எடுக்கும் சிறுத்தை 
 
பெண் சிங்கம் (Lioness) கர்ஜனை செய்யும் வீடியோ வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி அன்ஷுமன் சர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், சிங்கம் கர்ஜிப்பதைக் காணலாம். சிங்கத்தின் கர்ஜனை சற்று வித்தியாசமானது. இந்த வீடியோவைப் பார்க்கும் போது, இந்த பெண் சிங்கம் ஏதோ பிரச்சனையில் தவிப்பது போல் தெரிகிறது.

சிங்கத்தின் கர்ஜனைக்குப் பின்னால் பல ரகசியங்கள் மறைந்துள்ளதாம்!

சிங்கங்களின் கர்ஜனைக் குரல் பல்வேறு ரகசியங்களைக் கொண்டிருக்கும் என்று வீடியோவைப் பகிர்ந்துள்ள ஐஎஃப்எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வீடியோவில் உள்ள சிங்கம் பலமுறை கர்ஜிப்பதைக் காணலாம். சிங்கம் இப்படி கர்ஜிப்பது, அதன் உடல்நிலை சரியாக இல்லையோ என்ற கேள்விகளை எழுப்புகிறது. 

பெண் சிங்கம் குறைவாக கர்ஜிக்கிறது
வீடியோவை ட்வீட் செய்த அவர், ஆண் சிங்கத்தை விட பெண்சிங்கம் குறைவாக கர்ஜிக்கிறது (Lioness roar) என்று கூறினார். இந்த காணொளியை மக்கள் மிகவும் விரும்பி பகிர்ந்து வருகின்றனர். 

அன்ஷுமான் ஷர்மா எப்போதும் காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்துக் கொள்வார். அவை பார்க்கவும் சுவராசியமாக இருக்கும்.

ALSO READ | பூனைக்கு அல்வா கொடுத்த காகங்கள் - வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News