அனிதா மரணத்துக்கு நீதி தேவை - மனு மீது இன்று விசாரணை
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவ கனவு பறிபோனதால் கடந்த 1-ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி பல அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு நீதி விசாரணை அமைக்க வேண்டும் என பலர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமற்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு நீதி விசாரணை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இன்று உச்ச நீதிமற்றத்தில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற இருக்கிறது.