டெல்லி: மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5 ஆம் தேதி 2019-2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. அப்பொழுது போனி புயல் ஏற்பட்டதால், புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மே 20 ஆம் தேதி நடைபெற்றது. 


இந்தியா முழுவதும் நீட் தேர்வு சுமார் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் எழுதினர். இதில் தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். 


இந்தநிலையில், நீட் தேர்வு முடிவுகள் மாலை 4 மணிக்கு அறிவிக்ப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் www.nta.ac.in , www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியானது. 


தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 39.56 சதவீதம் ஆகும். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 7,97,042 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.


தமிழகத்தில் மாணவி ஸ்ருதி 625 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் தேசிய அளவில் 57வது இடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் பெண்கள் பிரிவில் தெலுங்கானா மாணவி மாதுரி ரெட்டி 695 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இவர் தேசிய அளவில் 7வது இடம் பிடித்துள்ளார்.