நீட் விவகாரம்: தலைமை வழக்கறிஞர் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நீட் அவசர சட்டம் தொடர்பாக தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும் பிற்பகல் 2 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்தியரசு உதவும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த திங்களன்று டெல்லி சென்ற சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழக அரசின் சட்ட வரைவை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்.
இதையடுத்து தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, சட்டத் துறை ஆகிய 3 அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்தன.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் 3 அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.