அனிதா டூ சுபஶ்ரீ !! நீட் தேர்வு என்ற பெயரில் அரசே நடத்தும் கல்விக் கொலைகள்: மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு என்ற பெயரில் தொடரும் மரணங்கள். இவை அனைத்தும் அரசே நடத்தும் கல்விக் கொலைகள் ஆகும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வு என்ற பெயரில் தொடரும் மரணங்கள். இவை அனைத்தும் அரசே நடத்தும் கல்விக் கொலைகள் ஆகும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வரவிருக்கும் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் கோயம்புத்தூரில் ஒரு மாணவி தனது இல்லத்தில் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் தற்கொலை செய்துக்கொள்ள நீட் தேர்வு (Neet Exam) பயம்தான் வழிவகுத்ததாக போலிசார் புதன்கிழமை தெரிவித்தனர்.
19 வயது மாணவி கடந்த சில மாதங்களாக நீட் தேர்வு எழுத தயாராகி கொண்டிருந்தார். ஆனால் நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால், நீட் உள்ளிட்ட தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது என உத்தரவிட்டது.
நீட் தேர்வு நெருங்கி வருவதால், மன அழுத்தத்திற்கு உள்ளன மாணவி சுபஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், திமுக (DMK) தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வு நடத்த மத்திய அரசு துடிக்கிறது. அதற்கு மாநில அரசு துணை புரிகிறது எனக் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
READ ALSO | நீங்கள் நீட் தேர்வு எழுதுபவரா... உங்களுக்கு ஒரு நற்செய்தி…!!