நீட் தேர்வு: CBSE-க்கு மதுரை ஐகோர்ட் கிளை 4 கேள்விகள்!
நீட் தேர்வு தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை CBSE-க்கு நான்கு கேள்விகள் எழுப்பி உள்ளனர்.
நீட் தேர்வு தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை CBSE-க்கு நான்கு கேள்விகள் எழுப்பி உள்ளனர்.
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது CBSE-க்கு மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் 4 கேள்விகளை எழுப்பி உள்ளனர். அவை,
# ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் போது பின்பற்றப்படும் விதிகள் என்ன?
# நீட் தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான வார்த்தைகள் எந்த அகராதியிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.
# தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன?
# தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் எடுக்கப்படுகின்றது என்பது மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படுகிறதா?
என மதுரை ஐகோர்ட் கிளை CBSE-க்கு நான்கு கேள்விகள் எழுப்பி உள்ளனர்.