சென்னை தியாகராயநகர் விடுதியில் வெளிநாட்டு பெண்மணி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள விஷயம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெதர்லாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்த லிண்டா ஈரானா(24) வயது இளம் பெண் தன்னை பத்திரிகையாளர் எனக் கூறி திநகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 27-ஆம் அறை எடுத்து தங்கியுள்ளார்.


குறிப்பிட்ட நாள் முடிவடைந்தும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் விடுதி நிர்வாகத்தினர் அவரது அறையினை திறந்துள்ளனர். அப்போது அறையினுல் அவர் இறந்துகிடப்பது தெரியவந்துள்ளது.


இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் லிண்டாவின் அருகில் விஷப்பாட்டில் இருந்ததை கண்டறிந்தனர். இறந்த லிண்டா விஷம் அறுந்தி தற்கொலை செய்துக்கொண்டாரா, இல்லை கொலை செய்யப்பட்டாரா எனும் சந்தேகத்தின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். 


விடுதியில் லிண்டா கொடுத்த தகவல்களின் பேரில் அவர் பத்திரிக்கையாளர் எனவும், நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.