சென்னை: கொரோனா தொற்றை (Coronavirus) கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று (திங்கள்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்தன. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி ஒத்த்குழைப்பு அளிக்க வேண்டும். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஒரு நாள் தொற்றின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அமலில் இருந்த சில கட்டுப்பாடுகளுடன் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு (Coronavirus Restrictions) உள்ளது. அது இன்று முதல் அமலுக்கு வந்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனுமதி இல்லை: 
திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மால்கள், பார்கள், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி இல்லை. வணிக வளாகங்களில் இயங்கும் மளிகை, காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. உணவகங்களில் உணவை எடுத்துச்செல்லவே அனுமதி. விளையாட்டு பயிற்சி சங்கங்கள் குழுமங்கள் இயங்க அனுமதி இல்லை. வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. தனியாக இயங்கும் மளிகை காய்கறி கடைகளுக்கு ஏசி இல்லாமல் இயங்க அனுமதி. பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்ல மட்டும் அனுமதி, நின்று பயணிக்க அனுமதி இல்லை.


ALSO READ |  ஏப்ரல் 26 முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?


50 சதவீதம் அனுமதி:
- ஐ.டி நிறுவனங்களில் குறைந்தது 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும். திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேர் அனுமதி இல்லை. இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மேல் அனுமதி இல்லை.


இ-பாஸ் கட்டாயம்: 
வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயமாகும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR