கெஜ்ரிவால் ஒரு மாவோயிஸ்ட்: சுப்ரமணிய சாமியின் சர்ச்சை பேச்சு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மாவோயிஸ்ட் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு மாவோயிஸ்ட் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்!
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் செயல்படுத்தும் திட்டங்களை, மத்திய அரசு முடக்கி வருவதாக கூறி, கடந்த 7-நாட்களாக ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன், சில அமைச்சர்களும் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளனர்.
நான்கு மாநில முதல்வர்கள் ஆதரவு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறுகையில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ஒரு மாவோயிஸ்ட் எனவும் அவருக்கு நான்கு மாநில முதலமைச்சர் என் ஏன் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். சு.சுவாமியின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.