தமிழகத்தின் புதிய கவர்னர் 6ம் தேதி பதவியேற்கிறார்!!
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹியா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட இவர் கிண்டி ராஜ்பவனில் வருகிற 6-ம் தேதி பதவியேற்கிறார். புதிய கவர்னருக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பாணா்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
தமிழக கவர்னராக இருந்த ரோசையா பதவி காலம் முடிவடைந்ததையடுத்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் தமிழகத்திற்கு நிரந்தர கவர்னரை நியமிக்க பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், தமிழகத்திற்கு முழுநேர கவர்னராக பன்வணிலால் புரோஹித் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முனாதாக கடந்த சனிக்கிழமை தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான புதிய கவர்னர்களை ஜனாதிபதி அறிவித்தார். இதில் தமிழகத்திற்கான கவர்னராக பன்வாரிலால் புரோஹியா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், வருகிற 6ம் தேதி கிண்டி ராஜ்பவனில் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோஹியா பதவியேற்கிறார்.