இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்; எவற்றுக்கெல்லாம் அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தியாவையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாவது அலையின் சீற்றம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு, ஊரடங்கு மற்றும் பல வித தொற்று பரவல் நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.
கொரோனாவின் (Coronavirus) இரண்டாவது அலை நாடு முழுவதும் மிக அதிக அளவிலான உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் தொற்று எண்ணிக்கையும், உயிர் சேதமும் பீதியை உண்டு பண்ணியது. இதையடுத்து கடுமையான ஊரடங்கு (Tamil Nadu Lockdown) நடவடிக்கைகள் பிறப்பிக்கப்பட்டன.
ALSO READ | TASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
பல வித கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செயல்முறை ஆகியவற்றின் காரணமாக தொற்றின் வேகம் குறையத் தொடங்கியது. இதை அடுத்து, அடுத்தடுத்த கட்ட ஊரடங்குகளிலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது, அடுத்த 2 வாரங்களுக்கு புதிய சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்ட ஊரடங்கில், பள்ளிகள் திறக்கபடுவதும், திரையரங்குகள் திறக்கப்படுவதும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகளின் முழு விவரம்
* 9 முதல் 12-ம் வகுப்புகள் (TN Schools) சுழற்சிமுறையில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும்.
* இன்று முதல் 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி.
* திரையரங்கப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
* இன்று முதல் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
* இன்று முதல் உயிரியல் பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி.
* இன்று முதல் அனைத்துக் கடைகளும் இரவு 10 மணிவரை இயங்க அனுமதி.
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
* ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்குப் பொதுப் பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதி.
* நீச்சல்குளங்கள், விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவிகிதப் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி.
* தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளிலுள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி.
இந்தத் தளர்வுகளைப் பொதுமக்கள் முழுப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ALSO READ | TN corona update District Wise ஆகஸ்ட் 22: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR