தேசிய வரைவு கல்விக்கொள்கை பற்றி கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய தேசிய வரைவு கல்விக் கொள்கை மீது கருத்து தெரிவிக்க ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை அண்மையில் தேசிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதில், ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே இந்த கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது.


இதையடுத்து, அந்த அறிக்கையை தமிழாக்கம் செய்யப்பட்டு www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கருத்துத் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது.


இந்நிலையில், கல்விக் கொள்கை அம்சங்களை முழுமையாக அறிந்துகொள்ள அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசியல் தலைவர்களும், எம்.பி.க்களும் அவகாசம் கேட்டிருந்த நிலையில், ஆகஸ்ட்15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.