ரேஷன் அட்டை நமது அத்தியாவசிய ஆவணங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதன் அடிப்படையில்தான் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் அரசாங்க திட்டங்களின் நன்மைகளை பெறவும் ரேஷன் கார்டுகள் தேவையாக இருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் (Ration Card Update) புதிதாக விண்ணப்பித்த 3 லட்சம் பேருக்கு ரேஷன் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு (Ration Card) வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 


ALSO READ | Ration Card: புதிய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் சேர்ப்பது எப்படி


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி, கள்ளிமந்தயம் ஒட்டன்சத்திரம் ஆகிய 3 இடங்களில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரத்தில் 697 குடும்ப அட்டைகள் உட்பட மூன்று இடங்களிலும் 1500 நபர்களுக்கு புதிதாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது., தமிழகத்தில் பல ஆண்டுகளாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படாமல் இருந்தது. முதல்வராக பதவி ஏற்றப்பின் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 தினங்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.


ALSO READ: Ration Card Apply: புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR