புதுச்சேரியிலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்! முழு விவரம் இங்கே!
புதுச்சேரியிலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் டீக்கடைகள், உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையில் புதுச்சேரி (Puducherry) மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு (Lockdown) போடப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு தொடர்ந்து 55 மணி நேரம் அமலில் இருந்தது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் டீக்கடைகள், உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் பொதுவழிபாட்டுத் தடை செய்யப்படும் என்று புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ALSO READ | புதுச்சேரியில் கொரோனா மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை: டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி கொரோனா நிலவரம்
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா (Coronavirus) நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. 5 ஆயிரத்து 632 பேருக்குப் பரிசோதனை செய்ததில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக ஆயிரத்து 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரி மாநிலத்தில் 815 நபர்கள், காரைக்காலில் 101 நபர்கள், ஏனாமில் 40 நபர்கள், மாஹேவில் 52 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7 ஆயிரத்து 288 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இதுவரை 45 ஆயிரத்து 243 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR