தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு..!
வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து, மதுக்கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன!!
வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து, மதுக்கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன!!
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், வேலூர் தவிர இதர 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகளும் வெளியானது.
நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், அங்கு மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலூர் தொகுதியில் உள்ள மதுக்கடைகளில் எந்த ஒரு நபருக்கும் பெட்டியில் மதுபானங்களை விற்பனைக் செய்யக்கூடாது என்றும் கடைகளில் அதிகமாக கூட்டம் இருக்கக்கூடாது என்றும் 30% அதிகமாக மது விற்பனையாகும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளுமாறும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.