INDIA Alliance In Tamil Nadu: மக்களவை தேர்தல் தேதிகள் இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளன. பாஜக - காங்கிரஸ் என கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களை (Lok Sabha Elections) போலவே இருமுனை போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணி (NDA Alliance) கடந்த முறையை இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெற்று வீழ்த்தவே முடியாத கட்சியாக உருவெடுக்க முயற்சிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2 முறை தோல்வியடைந்திருந்தாலும் நாடு தழுவிய அளவில் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, அந்த கூட்டணி வாயிலாக காங்கிரஸ் இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி விலகல், நிதிஷ் குமார் விலகல் என INDIA கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், இன்னும் அந்த கூட்டணியின் மீதும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. 


சி வோட்டர் கருத்துக்கணிப்பு


அந்த வகையில், இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பு, தேர்தல் பரப்புரை சார்ந்த திட்டமிடல், கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுகள், கூட்டணியை உண்டாக்க மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் என தினந்தினம் மக்களவை தேர்தல் சார்ந்த தகவல்கள் வெளியாகி உள்ளது. 


மேலும் படிக்க | கருத்து கணிப்பை தாண்டி தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: திருச்சியில் கி.வீரமணி


மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு முன் பல கருத்துக்கணிப்புகளும் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து தமிழ்நாட்டில் நடத்திய ஆய்வின் முடிவு இன்று வெளியாகி உள்ளது. The Mood of the Nation's பிப்ரவரி 2024 பதிப்பில் நடைபெற்ற இந்த கருத்துக்கணிப்பில், அனைத்து தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளிலும் சுமார் 35,801 நபர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. 


INDIA கூட்டணிக்கே வெற்றி


இந்த கருத்துக்கணிப்பு கடந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கலாம் என்பதால் இதனை கண்மூடித்தனமாக நம்பலாம் என்ற உறுதியேதும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 


அந்த வகையில், இந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் ஆளும் திமுக இடம்பெற்றுள்ள INDIA கூட்டணியே வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை திமுக தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளையும், அதிமுக தலைமையிலான கூட்டணி 1 தொகுதியையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


அதிமுகவால் பிரியும் வாக்குகள்


இருப்பினும், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி 53% வாக்குகளையும், பாஜக கூட்டணி 12% வாக்குகளையும், மற்றவைகள் 35% வாக்குகளையும் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை, திமுக கூட்டணி 47% வாக்குகளையும், பாஜக கூட்டணி 15% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 38% வாக்குகளையும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தென்னிந்தியாவில் வெற்றி கூட்டணி...


கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் INDIA கூட்டணிக்கே அதிக வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிய வருகிறது. இருப்பினும், INDIA கூட்டணியில் சமீபத்தில் நடந்த பல வெளியேற்றங்களை இந்த கருத்துக்கணிப்பில் பிரதிபலித்திருக்காது. ஏனெனில் ஜன.28ஆம் தேதியோடு கருத்துக்கணிப்புகள் நிறைவடைந்துள்ளன.  


மேலும் படிக்க | அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது -அதிமுக ஆர்.பி.உதயகுமார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ