உண்மை வெளியானது! மணிகண்டன் மரணம் விவகாரத்தில் புதிய திருப்பம்
மணிகண்டன் விஷம் அருந்தி இறந்து உள்ளார். காவல் துறை தாக்கியதால் அவர் இறக்கவில்லை என சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மணிகண்டன் விஷம் அருந்தி இறந்து உள்ளார். காவல் துறை தாக்கியதால் அவர் இறக்கவில்லை என உறுதியாகிறது. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் பகிர கூடாது. அவர் எதனால் விஷம் அருந்தினார் என விசாரணை நடைபெற்று வருகிறது என தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன், போலிஸ் அதிகாரிகள் அடித்ததால் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியான நிலையில், இன்று மணிகண்டன் மரணம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் அளித்தார்.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி போலீசார் விசாரணை முடிந்து வீடு திரும்பிய கல்லூரி மாணவர் மணிகண்டன், அடுத்த நாள் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீசார் தன் மகனை அடித்து துண்புறுத்தியதால்தான் உயிரிழந்துள்ளார். இதற்கு காரணமாக போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு இந்த சம்பவம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குனர் தாமரைக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, நீர்கோழியந்தல் கிராமத்தை சேர்ந்த இளைஞர் மணிகண்டன் ஓட்டிவந்த வாகனம் தொடர்பாக சந்தேகம் எழுந்த நிலையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்டு விசாரணை முடிந்து வீட்டிற்கு அவரது தாயுடன் அனுப்பபட்டார். உயர்நீதிமன்ற உத்தரவுபடி மணிகண்டனி் உடல்கூராய்வு நடத்தப்பட்டு ஆய்வறிக்கை சமர்பித்துள்ளோம், உடற்கூராய்வு முடிவில் மணிகண்டனின் உடலில் எந்த காயமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் அருந்திய விஷத்தின் பாட்டில் மணிகண்டனின் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மணிகண்டனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இளைஞரின் உயிரிழப்பு குறித்து எந்த விவரங்களும் தெரியமால் தகவல்களை பதிவிட வேண்டாம் என கூறினார். இந்த சந்திப்பின்போது இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக், தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு ஆகியோர் உடனிருந்தனர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR