வேலூர் மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வேலூர் மாவட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) முன்னிட்டு, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மதிவாணன்  உத்தரவின் பேரில் 31.12.2024 முதல் 01.01.2025 வரை, வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுக்க, 22-நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் (Four Wheeler Patrol), 60-இருசக்கர ரோந்து வாகனங்கள் (Two Wheeler Patrol) மூலமாக கண்காணிக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!! காரணம் என்ன?


தொடர்ந்து புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள், இருசக்கர வாகனங்களில் 2-க்கும் மேற்பட்ட நபர்கள்  செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியவற்றினை தடுக்கும் விதமாக, மாவட்டம் முழுவதும் 66 இடங்களில் வாகன தணிக்கை (Vehicle Check Points) மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் முக்கியமான 180திற்க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும். தொடர்ந்து போக்குவரத்துகளை சீர் செய்யும் பொருட்டு போக்குவரத்து காவல் குழுவும், மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக சாதாரண உடையில் காவல் குற்றப்பிரிவு தனிப்படையும், பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத செயல்கள் நடைபெறா வண்ணம் டிரோன்கள் (Drone) மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.



மேலும், இப்பாதுகாப்பு பணியில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 25 காவல் ஆய்வாளர்கள், 207 உதவி ஆய்வாளர்கள் / சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 513 காவல் ஆளிநர்கள், 70 ஆயுதப்படை காவலர்கள், 116 ஊர்காவல்படையினர் உட்பட மொத்தமாக 939 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து 'பைக் ரேஸ்' செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.


அவ்வாறு செய்பவர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் 'வீலிங்" செய்வது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மது அருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், குடிபோதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான புத்தாண்டினை கொண்டாடுமாறு மாவட்ட காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அண்ணனாக எப்போதும் துணை நிற்பேன்! விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ