தழிழக மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது; புதுப்பொலிவுடன் புத்தாண்டு புலர்கின்ற இந்த இனிய நாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், "மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தமிழக அரசு திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்தி, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கவும், பெண்களுக்காகப் பல நலத்திட்டங்களை உருவாக்கி செயலாக்கவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் எவருமே இருக்கக் கூடாது என்ற இலட்சியத்தை
நிறைவேற்றிடவும் அயராது பாடுபடுவதே எனது குறிக்கோள்" என்று உறுதியேற்று,
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டார்கள்.


தமிழ்நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெறவும், அவர்தம் நலனை பேணிப் பாதுகாக்கவும், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி, வளமிக்க தமிழ்நாட்டை படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத்தாண்டில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.


இந்தப் புத்தாண்டு புதிய நலன்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, என் அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.