புது டெல்லி: இன்று மாநிலங்களவையில் (Rajya Sabha) 61 புதிய எம்.பி.க்களின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அதிமுக மற்றும் திமுக, பாஜகவின் ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரசின் மல்லிகார்ஜூன் கார்கே, என்சிபியின் சரத் பவார் உட்பட பல தலைவர்கள் பதவியேற்றுள்ளனர். 61 உறுப்பினர்களில் 43 பேர் முதல் முறையாக மாநிலங்களவை சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இப்போது ராஜ்யசபையில் பாஜக எம்.பி.க்கள் எண்ணிக்கை 75 ல் இருந்து 86 ஆக உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அதிமுக (AIADMK) சார்பில் தேர்வான 3 எம்.பிக்கள் பதவியேற்றனர். அதாவது அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் பதவியேற்றனர்.


அதிமுக சார்பில் தம்பிதுரை (Thambidurai), கே பி முனுசாமி (K P Munusamy) மற்றும் இதன் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் (G K Vasan) ஆகியோர் போட்டியிட்டனர்


திமுக சார்பில் மூன்று பேர் போட்டியிட்டனர். அவர்கள் பெயர்கள் பின்வருமாறு, என் ஆர் இளங்கோ (N R Elango), பி செல்வராஜ் (P Selvaraj) மற்றும் திருச்சி சிவா (Tiruchy Siva) ஆவார்கள்.


ALSO READ | Ex CJI ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம்: இந்திய ஜனாதிபதி உத்தரவு


முதல் முறையாக, ஹவுஸ் சேம்பர் அறையில் பதவியேற்ற எம்.பி.க்கள்:
பாராளுமன்ற கூட்டத்தொடர் செயல்படவில்லை என்றால் பதவிபிரமாணம் வழக்கமாக சபாநாயகர் அறையில் நடைபெறும். ஆனால் இன்று முதல் முறையாக ஹவுஸ் சேம்பர் (Chamber Of House) அறையில் நடைபெற்றது. சத்தியப்பிரமாணத்தின் போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு உறுப்பினருடனும் ஒரு விருந்தினரை மட்டுமே அழைத்து வருவது அனுமதிக்கப்பட்டது. சில காரணங்களால் இன்று வராத உறுப்பினர்கள் மழைக்கால அமர்வின் போது பதவியேற்பார்கள்.


பாராளுமன்றத்தின் நிலைக்குழு கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றால், புதிய உறுப்பினர்கள் முதலில் பதவிபிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில், கொரோனா (Coronavirus) தாக்கத்திற்கு மத்தியில் புதிய உறுப்பினர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்ய மாநிலங்களவை சபாநாயகர் எம்.வெங்கையா நாயுடு முடிவு செய்தார்.


ALSO READ | மாநிலங்களவை தேர்தல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.


19 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தல்களில் பாஜகவுக்கு 8 இடங்களும், காங்கிரசுக்கு 4 இடங்களும் கிடைத்தன. இந்த 19 இடங்களில் கடைசி நேரத்தில் பாஜகவுக்கு 9, காங்கிரசுக்கு 6 இடங்கள் இருந்தன. அதாவது, இம்முறை பாஜக 1, காங்கிரஸ் 2 இடங்களை இழந்தது.


மாநிலங்களவையில் பாஜக ஒரு இடத்தை இழந்த போதிலும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்தத் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இழக்கவில்லை. ஆனால் மறுபுறம், யுபிஏ 2 இடங்களை இழந்தது.