`அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம்`: ஓபிஎஸ் குறித்த விளம்பரத்தால் சர்ச்சை!
அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற தலைப்பில் வெளியான ஓபிஎஸ் குறித்த விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடக்க உள்ள நிலையில், ஒற்றைத் தலைமை கோஷம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, கடந்த 5 நாட்களாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரையும் அவர்களது ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னையில் கடந்த 16-ம்தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றிய மூத்த தலைவர்கள் 14 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும் என்றும், அக்குழு எடுக்கும் முடிவுகளை செயல்படுத்தும் நபர்களாக ஒருங்கிணைப்பாளர்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, சென்னையில் மூத்த நிர்வாகிகள் ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தொடர்ந்து 4 நாட்கள் ஆலோசனை நடத்தினார். மேலும், சேலத்தில் இபிஎஸ்ஸை சந்தித்துவிட்டு வந்த தம்பிதுரையும் ஓபிஎஸ்ஸை சந்தித்தார்.
பின்னர் இந்தசந்திப்பு சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் நடந்ததுள்ளது. பின்னர், மீண்டும் இபிஎஸ்ஸை சந்திப்பதற்காக தம்பிதுரை புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது.
பின்னர், ஓ.பன்னீர்செல்வத்தை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் தோழமை என்பதால் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், தன்னுடைய ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு தான் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஓ.பன்னீர் செல்வம் யாரையும் புறக்கணிக்காமல் அரவணைத்து செல்வார் என்றும், யாரையும் அரவணைத்து செல்லாத ஜனநாயக பண்பற்ற மனிதராக எடப்பாடியை இப்போது எல்லோரும் பார்க்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் விட்டு கொடுத்து போனால் எடப்பாடியின் சர்வாதிகார போக்கு அதிமுகவை வலிமை இழக்க செய்து விடும் என்றும், சில நிர்வாகிகள் தவிர்த்து, அதிமுகவின் தொண்டர்கள் யாரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் மக்களவை தேர்தல், சட்டசபை தேர்தலில் தோல்வியே கிடைத்தது என்றும் அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், ஓ.பன்னீர் செல்வம் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரபல நாளிதழில் முன்பக்கம் முழுவதுமாக "அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம்" என்ற தலைப்பில் ஓ. பன்னீர்செல்வம் குறித்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த விளம்பரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR