கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரர் கோவிலில் கடந்த 2022ம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமீஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முபீன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிக்க தேவையான ரசாயன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 'பொட்டாஷியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர்' உட்பட, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான சில மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. கோவை போலீசார் விசாரித்த இந்த வழக்கு பின்னர் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணையில் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இருப்பது  தெரியவந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் பட்டியலின இளம்பெண்ணுக்கு சித்ரவதை..! கதறி அழும் தாய்..! என்ன நடந்தது?


இவர்களில் 11 பேர் மீது ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கடைசியாக அசாருதீன் மற்றும் முகமது இத்ரீஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் இருவர் மீதான குற்றப் பத்திரிகை இன்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  தாக்கல் செய்தனர். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 13 பேர் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழவுக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் தொடர்ந்து பல்வேறு  கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முகமது அசாருதீன் என்ற அசார், வேறொரு பயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2019ல் நம் அண்டை நாடான இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பிலும் இவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல், முபீனின் நெருங்கிய நண்பரான முஹமது இத்ரிஸ் என்பவர் கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்டார். இவர் குண்டுவெடிப்பில் பயன்படுத்திய காரை வாங்க முபீனுக்கு உதவியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.



இவர்கள் இருவரும், குண்டுவெடிப்பில் பலியான முபீனை சந்தித்து குண்டுவெடிப்பு தொடர்பான திட்டத்தை வகுத்ததும், இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. கைதாகியுள்ள 13 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் துவங்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க - ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ