திருச்சியில் வாலிபர் ஒருவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தது சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக துபாயில் இந்திய வாலிபர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.


இதன் அடிப்படையில் சென்னை, கோவை, திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் சில இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் லேப்டாப், மெமரி கார்டுகள், சிம்கார்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். 


இந்நிலையில் நேற்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திருச்சி எடமலைப்பட்டி புதூர் சீனிவாசநகர் விரிவாக்க பகுதியில் ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்தனர். சர்புதீன் என்பவர் இன்று  வெளிநாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் நேற்று சோதனை நடந்தது. இவர் டிப்ளமோ பட்டதாரி. சர்புதீனின் பெற்றோர் வீடு திருச்சி பாலக்கரையில் உள்ளது. 


இந்த நிலையில் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். வீட்டில் இருந்து கம்ப்யூட்டர்கள், செல்போன்கள்ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பாஸ்போர்ட், விசா, வெளிநாடு சென்று வந்த விவரம், இமெயில் விவரங்கள் ஆகியவற்றை திரட்டினர்.


திருச்சியில் ஏற்கனவே இது போன்ற சம்பவம் நடத்த நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடந்தது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.