உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழகத்துக்கு புகழாரம் சூட்டிய நிர்மலா சீதாராமன்
நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்காற்றி வருகின்றது என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் ஜனவரி 23, 24 என இரண்டு நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்கலும் கலந்துக்கொண்டார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது,
உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்பது ஒரு நல்ல முயற்ச்சி ஆகும். தொழிற்சாலைகள் அமைப்பதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பல நுற்றாண்டு முன்பே தமிழகம் வணிகத்தில் சிறந்து விளங்கினர். அதற்காக பல சான்றுகள் உள்ளன. இதனால் தான் தமிழகத்தில் தொழில் தொடங்குவது என்பது சரியான முடிவாக இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்காற்றி வருகின்றது. தமிழகம் மின் உற்பத்தியில் சிறந்து விளங்கி மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.
பொருளாதாரத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஜிஎஸ்டி வெற்றிகரமாக அமல் படுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகத்தில் ராணுவ தொழிற்சாலையை மத்திய அரசு அமைக்க உள்ளது எனக் கூறினா